districts

img

வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடுக அங்கன்வாடி ஓய்வூதியர் நூதன போராட்டம்

சேலம், அக்.14- வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தின் கீழ் அமைப்பா ளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர்க ளும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றிய அமைப்பா ளர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஓய்வுபெற்ற நிலையில் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கவில்லை. மேலும், தேர்தல் கால வாக்குறுதியில் திமுக அரசு கூறியதுபோல, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க  வேண்டும். குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, மருத்துவ  படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். சமூக பாதுகாப்புத்  திட்ட சிறப்பு பென்சன் என்ற வஞ்சக அரசாணையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு காலி தட்டுகளை  கையில் ஏந்தி பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்  வடிவேலு தலைமை வகித்தார். அனைத்துதுறை ஓய்வூதியர்  சங்க மாவட்ட செயலாளர் சி.ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜவேலு, ஓய்வூதி யர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜம், கிருஷ்ணமூர்த்தி  உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்ற னர்.

;