திருவில்லிபுத்தூர்,ஜூலை 14- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்ட திருவிழா ஜூலை 14 வெள்ளியன்று காலை கொடியேற் றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு ஆண்டாள் ரங்கமன்னா ருக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்கா ரம் செய்யப்பட்டு தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி பட்டம் நகர்வலம் வந்தது. கொடிமரத்தில் கோவில் அர்ச்சகர் ரகுராமப்பட்டர் கொடியினை ஏற்றி வைத்து திரு விழாவை துவக்கி வைத்தார். கொடியேற்ற விழாவில் மண வாள மாமுனிகள் மடத்தின் சட கோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தக்கார் ரவிச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, மாவட்ட கவுன்சில் குழு தலைவர் வசந்தி, மடவார் வளாகம் வைத்திய நாதசுவாமி கோயில் செயல் அலுவலர் ஜவகர், மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன் ,அரசு குற்றவியல் வழக்க றிஞர் திருமலை அப்பன், கோயில் ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருதேரோட் டம் வரும் 22ஆம் தேதி காலை 8 மணிக்கு நடை பெறுகிறது.