districts

img

பாப்பாக்குடி ராதாபுரத்தில் அம்பேத்கர் நினைவு தினம்

திருநெல்வேலி, டிச .8- டாக்டர்  அம்பேத்கர் 65 வது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் மைலப்பபுரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, சமூக நீதி, தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்டங்களு க்காக போராடியது குறித்து பேசப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாப்பாகுடி ஒன்றிய செயலாளர் கே. மாரிசெல்வம், ஒன்றிய குழு நிர்வாகிகள் ஜெகநாதன், பாஸ்கர் ,ஊர்தலைவர் ஆறு முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராதாபுரத்தில் அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் தாலுகா செயலாளர் கல்யாணி தலைமை யில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் குட்டம் என்ற இசக்கியப்பன், உதயம் சுரேஷ், பொன்னுச்சாமி, முகேஷ் குமார், ராஜா,குட்டிஎன்ற முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;