districts

திருவாடானை தாலுகா கிராமங்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கிடுக!

இராமநாதபுரம், ஜூலை 4-  கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் திரு வாடானை தாலுகாவில் உள்ள கிராமங்க ளுக்கு போர்க்கால அடிப்படையில் காவிரி  கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட  கிராமங்களில் காவிரி கூட்டுக் குடிநீர் முறை யாக வழங்கப்படாததால் கடும் குடிநீர்  தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் வழங்கக்  கோரி அகில இந்திய விவசாயத்தொழிலா ளர் சங்கத்தின் சார்பாக தொடர்ச்சியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக தாலுகா முழுவதும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். கிராமப்புற விவ சாயத்தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி திருவாடானையில் காலிக்குடங்களு டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய  தலைவர் ஏ.அருள்சாமி தலைமை வகித்  தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர்.பங்கேற்று சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் என்.கலையரசன், மாவட்ட செய லாளர் கே. கணேசன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துராமு, திருவாடானை தாலுகா செயலாளர் ஆர். சேதுராமன் தாலுகா பொருளாளர் எ.நாக நாதன் உள்ளிட்டோர் பேசினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு திரு வாடானை ஊராட்சி ஒன்றிய ஆணையர் இரா.சந்திரமோகனிடம் கோரிக்கை மனு கொடுத்து சங்க நிர்வாகிகள் பேசினர். திருவாடானை தாலுகாவில் உள்ள 200  கிராமங்களுக்கும் போர்க்கால அடிப்படை யில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.