districts

img

மகப்பேறு காலத்தில் மனநல பாதிப்பு!

உலகளவில் சுமார் 10 சதவீத கர்ப்பிணிப் பெண்களும், 13 சதவீத சமீபத்தில் பிரசவித்த பெண்களும் மனச் சோர்வு, பதற்றம், மனநோய் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவ தாக தி லான்செட் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை கூறு கிறது. இவர்களில் அதிகம்  பாதிக்கப்படுவோர் மிகக்குறை வான மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் எனத் தெரிவித்துள்ளது.  பாதிக்கப்படும் பெண்களில் சுமார் 85 சதவீதம் பேர் இது ஒரு  “புறக்கணிக்கப்பட்ட  “குழந்தை ப்ளூஸ்” தாக்கத்திற்கு உள்ளாகி யுள்ளனர்.  “குழந்தை ப்ளூஸ்” என்பது நீண்ட நேர அழுகை, சோகம் மற்றும் பதற்றம் போன்ற அறிகுறிகளை கொண்டதாகும்.  ‘பெரிநேட்டல்’ என்றால் என்ன? ‘பெரிநேட்டல்’ என்பது கர்ப்பத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவத்திற்குப் பிறகு சுமார் ஒரு  வருடம் வரையிலான காலமாகும். பெரிநேட்டல் மனநலப் பிரச்சனை என்பது ஒரு பெண்  கர்ப்பமாகி ஒரு வருடம் வரை எந்த நேரத்தி லும்  அனுபவிக்கும் பிரச்சனையாகும். ஒரு குழந்தையைப் பெற்றெடுப் பது  வாழ்க்கையில் ஒரு பெரிய நிகழ்வாகும். இந்தத் தருணத்தில் பலவிதமான உணர்ச்சிகளை அனு பவிப்பது இயற்கையானது. ஆனால் இந்த உணர்வுகள் பெண் ணின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கத் தொடங்கினால், அது குழந்தை பிறக்கும்போது ஏற்படும் மனநலப் பிரச்சனையாகவும் இருக்கலாம். அல்லது கர்ப்பமாகி யுள்ள பெண் கடந்த காலத்தில்  சந்தித்த பிரச்சனையின் ஒரு பகுதியாகக் கூட இருக்கலாம். “பெரிநேட்டல்” மனநல நிலைமை தாய் மற்றும் குழந்தை யின் நல்வாழ்வை கணிசமாக பாதிக்கவாய்ப்புள்ளது.

இது தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பு, கவனிப்பு மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியைத் தடுக்கும். குழந்தையின் உடல், அறி வாற்றலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். இது குடும்பத்தை மட்டுமல்ல எதிர்கால சந்ததி யினரை பாதிக்கும்” என்கிறது லான்செட் அறிக்கை.  பெண் கர்ப்பமாக இருக்கும்  போது அவர் மனம் ஆரோக்கிய மாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவருக்கு குடும்பத்தி னர் ஆதரவாக இருக்க வேண்டும்.  நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமாக உள்ள பெண்ணை அழ விடக் கூடாது. மோசமான கடந்த கால சம்பவங்களை நினைவூட்டக் கூடாது. மனநல அறிகுறிகள் தொடர்பாக உதவி தேவைப்படும் பெண்களுக்கு அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப் பட வேண்டும் என லான்செட் வலி யுறுத்துகிறது. ஏனெனில் 70 சத வீத பெண்கள் தங்களது பிரச்சனை களை வெளிப்படுத்தினால் தம்மீது  களங்கம் சுமத்தப்படுமோ என அஞ்சுகிறார்கள். அல்லது விழிப்பு ணர்வு இல்லாமையால் தவிக்கிறார்கள்.   மனநல பிரச்சனைகள் தற்கொலைக்கும் கூட ஈட்டுச் செல்லும் வாய்ப்புள்ளது. இந்த நிலை  பெரிநேட்டல் காலத்தில் அதிக வருமானம் கொண்ட நாடுகளில்  உள்ளது. இது தாய்வழி இறப்புகளில் 5 முதல் 20 சதவீதம் வரை உள்ளது.  மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவர்கள், தங்களது மனநலம் குறித்து கவலைப்படுவ தில்லை. சில நாடுகளில் பெரிநேட் டல் காலத்தில் கணவர்களும் மனச்சோர்வு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள்  இதில் கவனம் செலுத்துவதில்லை.

;