விருதுநகர், அக்.22- விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழி லாளர்களுக்கு பாண்டியன் நகர், காந்தி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி னர். விருதுநகர் ஒன்றியம் ரோசல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது காந்திநகர். இங் குள்ள குடியிருப்போர் நலச் சங்கத்தினர், ஊராட்சியில் பணிபுரிந்து வரும் 58 துப்பு ரவுத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டி கையையொட்டி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர். காந்தி நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச் சிக்கு சங்கத் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பி.ரவி வரவேற்றார். காவல் சார்பு ஆய்வாளர் மனோகரன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் புத்தாடைகளை வழங்கினர். மேலும் இதில், துணைத் தலைவர்கள் மணிகண்டன், மலைச்சாமி, துணைச் செய லாளர்கள் வி.சரவணன், ராஜா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.