districts

32 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

இராமநாதபுரம் மாவட்டத்தில் 93.86 சதவீதம் தேர்ச்சி
இராமநாதபுரம்,மே.19- இராமநாதபுரம் மாவட் டத்தில்  11 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 6,548 மாணவர்களும், 7,393  மாண விகளும் என மொத்தம் 13,941 மாணவ, மாணவி கள் தேர்வு எழுதினர். வெள்ளிக்கிழமை  வெளி யிட்ட தேர்வு முடிவில் 5,869 மாணவர்களும், 7,134  மாண விகளும் என மொத்தம் 13,003  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 93.27 சத வீதம் தேர்ச்சி பெற்றுள் ளனர். மாவட்டத்தில் 71 அரசு பள்ளிகளில் 12  பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 36 பள்ளிகளில் 07 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 54 மெட்ரிக் பள்ளிகளில் 34  பள்ளிகள் 100 சதவீதம்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 8011 மாண வர்களும், 8,287 மாணவிக ளும் என மொத்தம் 16,298 மாணவ, மாணவிகள் எழுதி னர்.  இதில், 7292 மாணவர்க ளும், 8005 மாணவிகளும் என மொத்தம் 15,297 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 93.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 137 அரசு பள்ளிகளில் 32 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 07 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள் ளனர். 75 மெட்ரிக் பள்ளிக ளில் 40 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.