districts

மதுரை முக்கிய செய்திகள்

வாகனங்களை ஆயுதங்களால் சேதப்படுத்திய 7 சிறுவர்கள் கைது

மதுரை, மே 7-   வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கி சேதப்படுத்திய 7 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான  கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 5  அன்று நடைபெற்றது. அன்றைய தினத்தில்  நெல்பேட்டை பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல்  அடித்து சேதப்படுத்தியது. இதுகுறித்த புகாரில் 7 சிறு வர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் பட்டாக்கத்தியுடன் ஆட்டம் போட்ட வீடியோ  சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், காவல்துறை யினர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நத்தம் அருகே டிராக்டரில் மோதி  பைக்கில் வந்தவர்  பலி

நத்தம், மே 7-   திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளிபட்டி யை சேர்ந்தவர் ராமன் (68). இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பாஸ்புரம் பிரிவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையில் நிறுத்தப்பட்டி ருந்த டிராக்டர் மீது  மோதினார். இதில் பலத்தக் காயமடைந்த அவர், நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும்  வழியிலேயே ராமன் உயிரிழந்தார்.  தகவலறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் இறந்தவரின் பிரேதத்தை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

400 கிலோ புகையிலை பறிமுதல் : 3 பேர் கைது 

விருதுநகர், மே 7-                             விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே வாக னத்தில் கடத்தப்பட்ட 375 கிலோ புகையிலையை போலீசார்  பறிமுதல் செய்தனர்.                        இராஜபாளையம் ஆசிரியர் காலனி பகுதியில் போலீ சார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே  வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.  அதில், அரசால் தடை செய்யப்பட்ட  375 கிலோ புகை யிலை  மற்றும் ரூ.19 ஆயிரம் ரொக்கம் இருப்பது கண்டறி யப்பட்டது. இதையடுத்து வாகனத்துடன்  புகையிலை மற்றும் பணத்தை  பறிமுதல் செய்த போலீசார், மம்சா புரத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன் என்ற சேட்டன்(30), பிர காஷ் என்ற பரோட்டா,(23), இசக்கிமுத்து, (24) ஆகியோ ரைக் கைது செய்தனர். 

மதுபோதையில் வங்கி ஏடிஎம்மில்  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் கைது

ஒட்டன்சத்திரம், மே 7-  ஒட்டன்சத்திரம் அருகே மதுபோதையில்  வங்கி ஏ.டி.எம்.மை சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார்  கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே  உள்ள  கொ.கீரனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டிஎம். உள்ளது. கடந்த 4 ஆம் தேதியன்று நள்ளிரவில் ஏ.டி.எம்மிற்குள் மர்ம ஆசாமி புகுந்து இயந்திரத்தை கையால் சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயன்று பணத்தை எடுக்க  முடியாததால் வெளியேறி சென்றுவிட்டார்.  இதில் ஏ.டி.எம்.  இயந்திரம் லேசாக சேதமடைந்தது.இதனை வங்கி ஊழி யர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வங்கி கிளை மேலாளர் சுமதி கள்ளி மந்தையம் காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்மில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமி யின் அடையாளத்தை வைத்து திண்டுக்கல் அருகே உள்ள சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் (வயது  24) என்பவர் என்றும் கொ.கீரனூரில் குடும்பத்துடன் தங்கி விவசாய கூலிவேலை பார்த்து வருவதாகவும், மது  குடிக்க பணம் இல்லாததால் ஏ.டி.எம்.கார்டு கொண்டு வராததால் ஏ.டி.எம். இயந்திரத்தை கையால் உடைத்து பணத்தை எடுக்க முயன்றது தெரியவந்தது.  இதனையடுத்து தமிழரசனை கள்ளிமந்தையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

லாரி மீது கார் மோதி விபத்து

குழித்துறை, மே 7 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர்  விஜூகிருஷ்ணன். இவரது உறவினருக்கு வெளிநாட்டில்  வேலை கிடைத்துள்ளது. அவரை வழி அனுப்பி வைப்ப தற்காக திருவனந்தபுரம் விமான நிலையம் சென்றுவிட்டு திரும்பும்போது லாரிமீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.  காரை ஓட்டிவந்த  விஜூகிருஷ்ணன் படுகாயமடைந்தார். 

குடிநீர் குழாய்களை அகற்றி எடுத்துச்சென்றார்

மாவூற்று வேலப்பர் கோவில் செயல் அலுவலர் மீது  ராஜக்காள்பட்டி ஊராட்சித் தலைவர் புகார்

தேனி, மே 7-   குடிநீர் குழாய்களை மாவூற்று வேலப் பர் கோவில் செயல் அலுவலர் எடுத்துச் சென்றுவிட்டதாக ராஜக்காள்பட்டி ஊராட்சித் தலைவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜக்காள்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாவூற்று வேலப்பர் கோவில் தென் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ,பழமை  வாய்ந்த முருகன் ஆலயம் ஆகும் .இங்கு  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீர் பைப்புகளை அகற்றி செயல் அலுவலர் நதியா எடுத்துச் சென்று விட்டதாக ராஜக்காள்பட்டி  ஊராட்சி  தலைவர் ஜெகதா ராஜதானி காவல்நிலை யத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகார் மனுவில் ,மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக 2020  மற்றும் 2021 இல் ரூ. 1.80 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பகுதியில் இருந்து மலை மேல் உள்ள கோவில் வரை குடிநீர் குழாய் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் பைப்புகளை காண வில்லை.  இதுகுறித்து விசாரித்த போது ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட குழாய்களை செயல் அலுவலர் நதியா எடுத்துச் சென்று  விட்டதாக அங்குள்ள ஊழியர்கள் மற்றும்  பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .பொது மக்கள் மற்றும் பக்தர்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட 60 இரும்பு குழாய்கள் சட்ட விரோதமாக எடுத்துச் சென்ற வேலப்பர் கோவில் நிர்வாக அதி காரி நதியா மீது நடவடிக்கை எடுத்து, அவைகளை மீட்டு தர வேண்டும் என்று  தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

‘அரிசிக்கொம்பன்’ யானை நடமாட்டம்  

மேகமலை வனப்பகுதி அருகே வசிக்கும் மக்கள்  அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்த்திடுக!

தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் 

தேனி, மே 7- அரிசிக்கொம்பன்”  யானை நடமாடுவ தால் மேகமலை வனப்பகுதி அருகே வசிக்  கும் மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், மேகமலை கோட்டம், திருவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க  ‘அரிக்கொம்பன்’ என்ற ‘அரிசிக்கொம்பன்’  என்னும் ஒற்றை காட்டுயானை நுழைந் துள்ளது.   கேரள வனத்துறையிடமிருந்து ‘அரிக்  கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்பன்”; யானை நடமாடிய பகுதிகளை புவியி டங்காட்டியின் (ஜிபிஎஸ்) மூலம் பெறப் பட்ட விவரங்களை சேகரிக்கப்பட்டுள்ளது. 06.05.2023முதல் மேகமலை பகுதிக்கு  செல்வதற்கு நுழைவாயிலாக உள்ள  வனத்துறையின் தென்பழனி சோதனைச்  சாவடி மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப்பணிக் காக 20 காவலர்கள் தென்பழனி சோத னைச்சாவடி பகுதியிலும், 20 காவலர்கள்  மேகமலை ஹைவேவிஸ் பகுதியிலும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூல மாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம் பன்” யானையின் கழுத்துபகுதியில் உள்ள  ரிசீவர் கருவியில் செயற்கைக்கோள் மூல மாக கிடைக்கும் சமிக்ஞைகளை துணை  இயக்குநர், பெரியார் புலிகள் காப்பகம்  (கிழக்கு) மூலமாக பெற்று கண்காணிப் பட்டு வருகிறது. மேலும், யானையின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு WWF என்ற அமைப்பின் மூலமாக ஒரு VHF ரிசீவனர் பெறப்பட் டுள்ளது.   மேலும், யானையின்  நடமாட்டத்தை கண்காணிக்க வனச்சரக அலுவலர், கூட லூர், கம்பம் (கிழக்கு) மற்றும் சின்னமனூர் தலைமையில் மூன்று தனித்தனியான குழுக்கள் அமைக்கப்பட்டு யானையின் நடமாட்டத்தை இரவு பகலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, மேகமலை வனப்பகுதி யில் ‘அரிக்கொம்பன்” என்ற ‘அரிசிக்கொம்  பன்” யானையின் நடமாட்டம் குறித்து வனத்  துறையினரால் தொடர்ந்து கண்கா ணிப்பட்டு வருவதால், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாமென வும், மேகமலை வனப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்கள் அவசியமின்றி வெளி யில் செல்வதை தவிர்க்குமாறும், இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்து  வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வா கத்திற்கும் தக்க ஒத்துழைப்பு நல்குமாறும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை சித்திரை திருவிழாவில் சமூகவிரோதிகள் வன்முறை

உரிய நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

மதுரை, மே 7-  மத நல்லிணக்கத்தின் அடையா ளமாக விளங்கும் மதுரை சித்திரை திருவிழாவில் சில விரும்பத்தகாத சமூகவிரோதிகளின் செயல் நிகழ்ந்  துள்ளது. இதன்மீது மதுரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறை யும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்  துள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் மா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறும் மதுரை வைகையாற்றில் கள்ளழகர் இறங் கும் சித்திரை திருவிழா கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக கடந்த ஆண்டைப் போல் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மதுரை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகி யவை ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் திருவிழாவை காணவரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கடந்த மே 4ஆம்  தேதி நள்ளிரவில் சில விரும் பத்தகாத சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அதில் வைகை வட கரை பகுதியில்  மதுரை சோலை யழகுபுரம் எம்.கே.புரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வைகையாற்று தண்ணீரில் மூழ்கி 3 பேர் இறந்துள்ளனர். மதுரை நெல்பேட்டை குடி யிருப்புப் பகுதியில் நிறுத்தி வைக்  கப்பட்டிருந்த இருசக்கர வாக னங்களை சிலர் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர். கோரிப பாளையம் குருவிக்காரன் சாலை பகுதிகளில் பொதுமக்கள் தாக்கப்  பட்டுள்ளனர்.  மதுரை சித்திரை திருவிழா வின் பாதுகாப்பிற்காக சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தும் சில விரும்பத்தகாத சம்ப வங்கள் நடந்துள்ளன.  மதுரை நகரில் தேவையான இடங்களில் இன்னும் கூடுதலாக  கண்காணிப்பையும் பாதுகாப்பை யும் உறுதிப்படுத்தியிருக்க வேண்  டும். வைகை ஆற்றில் மூழ்கி இறந்த வர்களின் குடும்பங்களை பாது காக்கும் விதமாக முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும். நெல்பேட்டை, குருவிக்காரன் சாலை உள்ளிட்ட மதுரை நகரின்  பல்வேறு பகுதிகளில் வன்முறை யில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பினை உறுதிப் படுத்திட மதுரை மாவட்ட நிர்வாக மும் - காவல்துறையும் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

பட்டுக்கோட்டை-காரைக்குடி வழியாக மதுரைக்கு ரயில் இயக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், மே 7-  பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழியாக  மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே  பொது மேலாளருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   பட்டுக்கோட்டை வட்டார ரயில் பயணிகள் நலச்  சங்கத்தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகா னந்தம் ஆகியோர் தெற்கு ரயில்வே பொது மேலாளர்,  திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோ ருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.  அதில் கூறியிருப்பதாவது:-  மதுரை மாநகரம் தமிழ்நாட்டில் இரண்டாஆவது பெரிய நகரமாகும். மீனாட்சி அம்மன் கோவில், திருப்ப ரங்குன்றம், பழமுதிர் சோலை, கள்ளழகர் கோவில் போன்ற புகழ்மிக்க கோவில்கள், திருமலை நாயக்கர் மகால் போன்ற சுற்றுலா தலங்கள், சென்னை உயர்  நீதிமன்ற கிளை, மருத்துவமனைகள் போன்ற முக்கிய மான இடங்கள் மதுரையில் உள்ளன.  மதுரை தென் தமிழகத்தின் முக்கியமான தொழிற்துறை மையமாகவும் வர்த்தக மையமாகவும் உள்ளன.  தென்  மாவட்டங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மயிலாடு துறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்  தாங்கி பகுதியில் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் விளைவிக்கப்படும் பொருட்களை கொண்டு செல்லவும், மதுரை பகுதியில் இருந்து ஜவுளி,  மளிகை பொருட்களை கொண்டு வரவும் போதிய போக்கு வரத்து வசதிகள் இல்லாமல் உள்ளது.  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதியில் இருந்து மதுரைக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் உள்ளது.   எனவே, மதுரைக்கு காலை, இரவு நேரத்தில் செல்ல மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லை விளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக் கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, மானா மதுரை வழியாக மதுரைக்கு இரு முனைகளில் இருந்தும் ரயில்களை இயக்க வேண்டும்” என அதில் கூறப் பட்டுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகே வீட்டில் நகை திருடியவர் கைது

திருவில்லிபுத்தூர்,மே 7- விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் அருகே கோட்டைபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெய ரஞ்சினி (29). இவர் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவல கத்தில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3 ஆம் தேதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது.  பீரோவில் இருந்த 1 பவுன் தங்க செயின், அறை பவுன்  கம்மல், கால் பவுன்  மோதிரம் ஆகிய தங்க நகை கள் திருடப்பட்டு இருந்தது.  இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது  பக்கத்து வீட்டைச் சேர்ந்த உறவினரான பெருமாள்(39), என்பவர் வீட்டுக்கு வந்தது தெரிய வந்தது. இது குறித்து  ஜெயரஞ்சனி அளித்த புகாரின்பேரில் திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர்.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை

முதலமைச்சருக்கு ஊழியர், உதவியாளர் சங்கம் நன்றி

சென்னை, மே 7- அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் கோடைவிடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலி னுக்கு  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் எஎப்.ரத்தினமாலா, பொதுச் செயலாளர்  டி.டெய்சி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு 32 வருட காலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து போராட் டம் நடத்தினோம். ஆனால் நிறை வேற்றப்படவில்லை, நாங்கள் காத்திருப்புப் போராட்டம் தொடங்  கிய 12 மணி நேரத்தில் பெண்கள்  போராடக்கூடாது என்று சொல்லி உடனே அழைத்து பேசி கோரிக்கை யை நிறைவேற்றுங்கள் என ஆணையிட்ட முதல்வருக்கு  நன்றி  தெரிவித்து கொள்கிறோம், இந்த அரசு சமூகநீதி அரசு என்பதையும், பெண்களுக்கான அரசு என்பதை யும் நிரூபித்துள்ளது. எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முதல்வர் ஆணையிட்ட உடன் பெண்களின் இன்னல்களை புரிந்து கொண்டு போராடும் ஊழி யர்களுக்கு இரவு நேரத்தில் பாது காப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விட்டு காலையில் பேச்சுவார்த்தை நடத்தி உடனே கோடை விடுமுறை இந்தாண்டு வழங்கப்படும் என்று  உறுதியளித்து கோடைவிடுமுறை யை 15 நாட்கள் ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் வழங்கிய சமூகநலம் மற்றும் பெண்கள் உரி மைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில்  நன்றிகளை தெரிவித்து கொள்கி றோம்.

அமைச்சர் சொன்னவுடன் உட னடியாக அதற்கான பணிகளில்  ஈடுபட்டு மத்திய அரசின் அனுமதி யை பெற்று பல்வேறு மாநிலங்க ளில் உள்ள அரசாணைகளை எல் லாம் பார்வையிட்டு உடனடியாக ஊழியர்கள் மற்றும் உதவியாளர் இருவருக்கும் விடுமுறை என  அரசாணை வெளியிட்ட சமூக நலத்துறை முதன்மை செயலர் மற்  றும் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித்திட்ட குழும இயக்கு நர் மற்றும் உதவி இயக்குனர்  அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் இந்த கோரிக்கை நிறைவேற எங்களுடன் நின்று  எங்களது கோரிக்கைகளை எப்போதும் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பி னர்கள்  சின்னதுரை நாகைமாலி ஆகியோருக்கும் நன்றி தெரி வித்துக்கொள்கிறோம். மேலும் இது போன்று எங்க ளின் நீண்ட நாள் கோரிக்கையான முத்தான மூன்று கோரிக்கை தேர் தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்  குறுதியையயும், முதல்வர் , அமைச்சர் ஆகியோர் நிறைவேற்றி தருவார்கள் நம்பிக்கையில் 50 ஆயிரம் ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றோம். காலிப்  பணியிடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சர் ஆவன செய்ய  வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.