மக்கள் சந்திப்பு இயக்கம்
தூத்துக்குடி, செப்.9- தூத்துக்குடி 2 ஆம் கேட் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத செயல்பாடு கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 2 ஆம் கேட் பகுதியில் உள்ள வீடுகள், மற்றும் கடைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 18 வது வார்டு கிளை சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதற்கு அழகு பாண்டி தலைமை வகித்தார்..மாவட்ட குழு உறுப்பினர்கள் காசி,எம்.எஸ் முத்து, கிளை செயலா ளர் கந்தசாமி, குமார வேல், பெருமாள், பூவலிங்கம், முத்து, நம்பிராஜன், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பைக் விபத்தில் 3 வாலிபர்கள் பலி
தூத்துக்குடி, செப்.9- தூத்துக்குடியில் சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக உயிரி ழந்தனர். தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4-வது தெருவை சேர்ந்த வெள்ளத்துரை மகன் விக்னேஷ் ராஜா (17). எட்டயபுரம் ரோட்டில் உள்ள கார் சர்வீஸ் செண்டரில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் சனிக்கிழமை இரவு தனது உறவினரான சுந்தரவேல் புரம் 4வது தெருவைச் சேர்ந்த முருகன் மாரிசெல்வம் (29), மற்றும் நண்பர் ஹவுசிங் போர்டு சாகுல் ஹமீது மகன் ஆஷிக் முகம்மது (18) ஆகியோ ருடன் ஒரே பைக்கில் முத்தையாபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்செந்தூர் சாலையில் எம்ஜிஆர் நகர் மேம்பாலத் தில் வந்தபோது சென்டர் மீடியனில் பைக் மோதி விபத் துக்குள்ளானது. இதில் விக்னேஷ் ராஜா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். ஆஷிக் முகம்மது மருத்துவ மனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தார். மேலும் படு காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட மாரிசெல்வம் சிகிச்சை பலனின்றி ஞாயிறு காலை 3 மணியளவில் இறந்தார். விபத்து குறித்து தென்பாகம் கா வல் ஆய்வாளர் ராஜா ராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தை டவுன் டிஎஸ்பி சத்யராஜ் பார்வை யிட்டார். பைக் விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5.2 கோடியில் ஆதிதிராவிட மாணவர் நல விடுதி அமைச்சர் ஆய்வு
தூத்துக்குடி, செப்.9- ஓட்டப்பிடாரம் அருகே ரூ.5 கோடியே 2 லட்சம் செல வில் கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிட நல மாணவ-மாணவி கள் விடுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் தாட்கோ மூலம் ரூ.2 கோடியே 51 லட்சம் செலவில் ஆதிதிரா விட மாணவர் விடுதியும், வடக்கு பரும்பூரில் மாணவி களுக்கு தாட்கோ மூலம் ரூ.2 கோடியே 51 லட்சம் செலவில் ஆதிதிராவிட மாணவி விடுதியும் கட்டப்பட்டு வருகிறது. இந்த விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஓட்டப் பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் சனி யன்று ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகளின் நிலைமையை கருத்தில் கொண்டு தர மான முறையில் விரைவாக கட்டி முடிக்க ஒப்பந்ததாரரை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
லாரியில் மணல் கடத்திய டிரைவர் தப்பி ஓட்டம்
திருநெல்வேலி, செப்.11- பணகுடி அருகே உள்ள பழவூர் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சங்கனாபுரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் அனுமதி பெறாமல் மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் கள் அதனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக் குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.
டிஎன்எஸ்பி குரூப் 8 தேர்வு 10 மையங்களில் நடைபெற்றது
திருநெல்வேலி, செப்.11- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய கோவில் செயல் அலுவலர் நிலை 4-க்கான எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. காலை, மாலை என இரு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற் காக 2,576 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் ஞாயிற் றுக்கிழமை நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவே கானந்தா வித்தியாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 மையங்களில் ஞாயிறு காலை தொடங்கியது. தேர்வை 1,294 பேர் மட்டுமே எழுதி னர். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வை தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் நிலையில் 3 சுற்றுக்குழு அலுவலர்கள் கண்கா ணித்தனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவின்பேரில் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல தேர்வு மையங்க ளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
தொழிலாளி மரணம்
தேனி, செப்.10- கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரி ழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் பகுதியைச் சேர்ந்த வர் தங்கமணி(47).இவர் கம்பத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை கம்பம் தாத்தப்பன்குளம் அருகே உள்ள மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிட மாணவர்கள் உறுதியேற்பு!
தூத்துக்குடி, செப்.11- கோவில்பட்டி புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவில் பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சி இல்லாத தமிழகத்தை உருவாக்கிடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அனைவருக்கும் தன்னம் பிக்கை மற்றும் தலைசிறந்த தலைவர் களின் சுவையான நிகழ்வுகள் என்ற புத்த கங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புத்தக விற்ப னையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகு லேஷன் பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தக கண்காட்சி விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் வரவேற்றார். கோவில்பட்டி ரோட் டரி சங்க முன்னாள் தலைவர் வீராச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கு புத்த கங்களை பரிசாக வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் பணி நிறைவு பூல் பாண்டி, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் லட்சுமணன்பிரபு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் விக்டர்,உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர் ராஜ பாண்டி நன்றி கூறினார்.
முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பயிற்சிக்கு செப்.14 க்குள் பதிவு
நாகர்கோவில், செப்.11- முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பி னை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வாயிலாக பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் இலவசமாக வழங்கிட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பி னை ஊக்குவிக்கும் பொருட்டு கைப்பேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், ஏ.சி, குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசி யன், பிளம்பிங், ஓட்டுநர் பயிற்சி, மின்சா ரத்தினால் இயங்கும் சீருந்துகள் பரா மரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல் / பழுது நீக்குதல், மின்சாரத்தினால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல் / பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வ தற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல். இப்பயிற்சியில் இலவசமாக கலந்து கொள்ள விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள் செப்டம்பர் 14 தேதிக்குள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் வருகை தந்து தங்கள் பெயரினை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தெற்கு பாப்பா குளத்தில் புதிய நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
திருநெல்வேலி, செப்.11- கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் போன்ற கிரா மங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அறுவடை நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் விளைவித்த நெல் மூடைகளை விற்பனை செய்வதற்காக அருகாமையில் எங்கும் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிக வும் கவலை அடைந்து வந்தனர். இதைத் தொடர்ந்து தெற்கு பாப்பான்குளத்தில் அர சின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி விவ சாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இந்நிலையில் தெற்கு பாப்பான்குளத் தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யம் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இசக்கிமுத்து கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இதில் விவசாயிகள், பொதுமக் கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிஐடியு திருவாரூர் மாநாடு வரவேற்புக்குழு அமைப்பு
மன்னார்குடி, செப்.11- சிஐடியுவின் திருவாரூர் மாவட்ட ஒன்பதாவது மாநாடு அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமையில் மன்னார் குடியில் நடைபெற்றது. இதில் வரவேற்புக் குழு தலைவராக ஏ.கோவிந்த ராஜ் செயலாளராக ஜி.ரகுபதி, பொருளாளராக அ.ஹரி ஹரன் உள்பட 81 பேரை கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாநிலச் செயலாளர் பி.மோகன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாளை தஞ்சையில் மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் செயல் படுத்தப்படும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி களுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தரைத்தளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் செப்டம்பர் 13 அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி பகுதி களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறை களை மனுக்களாக அளித்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.
கடற்கரை பகுதியில் 56 கிலோ கஞ்சா பறிமுதல்
தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரை யோரப் பகுதியில், சனிக்கிழமை கேட்பாரற்று கிடந்த 56 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். அதிராம்பட்டினம் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் வெற்றிச்செல்வனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பசாமி, நுண்ணறிவு பிரிவு காவ லர்கள் கோபால், பாண்டியன், காவலர் நாராயணசாமி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தம்பிக்கோட்டை மறவக்காட்டில் கடற் கரை உப்பளம் சாலையில் முள்புதரில் இரண்டு பச்சை நிற பாலித்தீன் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த பைகளில் 28 பண்டல்களில் தலா 2 கிலோ வீதம் சுமார் 56 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைப் பறிமுதல் செய்த காவல்துறை யினர் இதுகுறித்து நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும், கஞ்சா எப்படி வந்தது என்பது குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குடவாசல், செப்.11- திருவாரூர் மாவட்டம்,குடவாசல் மற்றும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையிலும் திருட்டு சம்பவங்க ளிலும் ஈடுபட்டு வந்தவர் குடவாசல் சூரிய மண்டபத் தெருவை சேர்ந்த சாமிதுரை என்பவரின் மகன் பரணி தரன். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறை யில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பரிந்துரையின் பேரிலும் திருவாரூர் மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின்படியும் சனிக்கிழமையன்று பரணி தரனை குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
அய்யம்பேட்டை, செப்.11- தஞ்சாவூர் மாவட்டம், அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரிச் சங்கம் சார்பில் மேல பட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரிச் சங்கத் தலைவர் திலகர், பொருளாளர் ரகமதுல்லா, முன்னாள் உதவி ஆளுநர் காதர்பாட்சா உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று சாவடி பஜார் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப் பட்டன. பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பேனா, பென் சில், ஸ்கேல் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தஞ்சை அரசு கொள்முதல் நிலையத்தில் விற்க கொண்டுவந்த வெளி மாவட்ட 10.5 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்
தஞ்சாவூர், செப்.11- தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வந்து நெல் விற்பனை செய்யக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வியாபாரிகள், வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொண்டு வந்து தஞ்சை மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்க ளில் விற்பனை செய்வதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த நிலையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் உத்தர வின்பேரில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மேற்பார் வையில், தஞ்சாவூர் சரக குடிமைபொருள் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்பி. சரவ ணன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்புலனாய்வு துறை உதவி ஆய்வா ளர் விஜய் மற்றும் காவல்துறையினர், தஞ்சை மாவட்ட எல்லையான கும்பகோ ணம் அருகே நீலத்தநல்லூர் சோதனைச் சாவடியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 10.5 டன் நெல் மூட்டை கள் இருந்தது. இது குறித்து லாரியில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி னர். அதில், அவர்கள் அரியலூர் மாவட்டம் சாத்தாம்பாடி வடக்கு தெருவை சேர்ந்த வெற்றிமணி (22), அரியலூர் நாகமங்க லத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வெளி மாவட்டத்தில் இருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி, தஞ்சாவூர் மாவட்ட கொள்முதல் நிலையங்களில் அதிக விலைக்கு விற்க கொண்டு வந்த தும், டிரான்சீட் படிவம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், பில்கள் முறையாக இல்லா ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்து திருநாகேஸ் வரம் அரசு நவீன அரிசி ஆலை நிர்வாகத்தி டம் ஒப்படைத்தனர். அங்கு வெற்றிமணி, முருகேசன் ஆகி யோரிடம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக கும்பகோணம் மண்டல மேலா ளர் இளங்கோவன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.