districts

img

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 34.39 கோடி கடன்

தேனி ,டிச.14- தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் திருத்த ணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்கி துவக்கி வைத்ததை தொடர்ந்து தேனியில் 625 சுய உதவிக் குழுக்க ளைச் சேர்ந்த 6,923 உறுப்பினர்களுக்கு 34.39 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள், நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன்  வழங்கினார். தேனி-அல்லி நகரத்தில் தனியார்  திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், 625 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 6,923 உறுப்பினர்க ளுக்கு 34.39 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள், நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது, சட்டமன்ற உறுப்பி னர்கள் கம்பம் ராமகிருஷ்ணன்  , ஆண்டிபட்டி மகாராஜன் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மரு. ஆர்.தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ஜெ. ரூபன் சங்கர் ராஜ்,  மகளிர் சுய உதவிக் குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;