தேனி ,செப்.28- தேனி ,திண்டுக்கல், மதுரை மாவட்டங்களின் பாச னத்திற்கு வைகை அணையி லிருந்து 58-ஆம் கிராம கால்வாயில் தண்ணீரை, தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன்,மதுரை மாவட்ட ஆட்சியர் மரு. எஸ்.அனீஷ் சேகர் ஆகியோர் செப்டம் பர் 28 அன்று திறந்து வைத்தனர். வைகை அணையிலி ருந்து 58 ஆம் கிராம கால் வாய் பாசனத்திற்கான தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) , பி.அய்யப் பன் (உசிலம்பட்டி) ஆகி யோர் முன்னிலையில் திறந்து வைத்தனர். தமிழக அரசின் உத்த ரவின்படி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்குட் பட்ட விவசாய பாசன நிலங் கள் பயன்பெறும் வகையி லும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற் குட்பட்ட விவசாய பாசன நிலங்கள் பயன்பெறும் வகையிலும் தேனி மாவட் டம், ஆண்டிபட்டி வட்டத்திற் குட்பட்ட வைகை அணை யிலிருந்து 58-ஆம் கிராம கால்வாய் பாசனத்திற்கான 300 மி.கன அடி தண்ணீரினை நாளொன்றுக்கு 150 கனஅடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினை பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட 1,912 ஏக்கர் விவசாய பாசன நிலங்களும், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 373 ஏக்கர் விவசாய பாசன நிலங்களும் என மொத்தம் 2,285 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்நிகழ்வில் தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சக்கரவர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவ சாய பெருமக்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.