மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜபாளையம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 24 தீக்கதிர் சந்தாக்களுக்கான தொகை 28, 550 ரூபாய் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம், ஒன்றியச் செயலாளர் முனியாண்டி வழங்கினார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜுணன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.