districts

img

சவூதி அரேபியாவில் உயிரிழந்த தொழிலாளி பிரகாஷ் குடும்ப நிதியாக ரூ.2.5 லட்சம்

நாகர்கோவில், செப்.27- குமரி மாவட்டத்திலிருந்து சவுதி அரேபியாவில் வேலைக்குச் சென்று உயிரிழந்த தொழிலாளி பிரகாஷ் குடும்ப நிதியாக அங்குள்ள புலம் பெயர்ந்தோர் அமைப்பு சார்பில் ரூ.2.5 லட்சம் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத் துறை குட்டைக்காடு கிளாச்சி விளையைச் சேர்ந்தவர் பிரகாஷ் (45).  இவர் சவூதி அரேபியாவில் சுமார் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். சவூதி அரேபியாவில் செயல்பட்டுவரும் ஹசீம் பிரவாசி சங்கத்தினர் பிரகாஷின் குடும்ப நிதி யாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கி னர். அதை பிரகாஷின் குடும்பத்தினரி டம் பாரசாலை எம்எல்ஏ சி.கே ஹரீந்திரன் வழங்கினார். சிபிஎம் பாறசாலை வட்டார செயலாளர் எஸ்.அஜய்குமார், குமரி மாவட்ட மூத்த தலைவர் மாதவன், பிரவாசி சங்க மாவட்ட செயலாளர் சதிகுமார், ஹசீம் பிரவாசி சங்க ஜீவ  காருண்ய ஒருங்கிணை்பபாளர் நைசான், துரிகா சாஜர் கிளை செயலா ளர் மோகனன் அம்பாடி, துணை தலை வர் பைஜு வட்டப்பாற, சிபிஎம் திரு வட்டார் வட்டாரக்குழு உறுப்பினர். பென்ஜேக்கப், தேக்கின்காடு கிளை செயலாளர் பி.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

;