districts

img

1 லட்சம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள்

மதுரை, செப்.23- மதுரை தமுக்கம் மைதானத்தில் வெள்ளியன்று துவங்கிய மதுரை புத்தக திருவிழாவில் 210 புத்தக விற்பனை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவைகளில்  சிறுகதை, நாவல், தொல்லியல்துறை, சிறுவர் கதைகள், கவிதை, வரலாற்று கதைகள் மற்றும் காவியங்கள், வர லாற்று  தலைவர்கள், சாதனையா ளர்கள் என்று  சுமார்  ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட தலைப்புகளில் 10 லட்சம் புத்தங்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன.  அனைத்து பதிப்புகளிலும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 168, 169 கடை எண்ணில் அமைந்துள்ள பாரதி புத்தகாலயம் விற்பனை மையத்தில் வ.உ.சிதம்பரனார் சுய சரிதை உரைநடையிலும், சுப்பாராவ் அவர்களின் சிறார் மொழி பெயர்ப்பு சிறுகதைகள் “கிளியும் அதன் தாத்தா வும்”, கிழவியும் பூனையும் , ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு  பிடித்த கதை கள்,  பாரதி புத்தகாலயம் வெளியீடான சீமையில் இல்லாத புத்தகங்கள் ஆகி யவை புதிதாக விற்பனைக்கு வந்துள் ளன. சக. முத்துக்கண்ணன், ச. முத்துக் குமாரி, ரா. ராணி குணசீலி எழுதிய “புத்தகக் கண்காட்சிக்கு நான் ஏன் வர வேண்டும்” புத்தகம் பாரதி புத்த காலயம் வெளியீடு அரசு பள்ளி  மாண வர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இன்று (சனிக்கிழமை) புத்தக திருவிழாவில் ஆனையூர் தங்கப் பாண்டியனின் கலை நிகழ்ச்சி, கலை மாமணி திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் குழுவினரின் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்வும் தருவது அன்பா? - அறிவா? சிறப்பு பட்டிமன்றம்  நடை பெறுகிறது.

;