districts

img

ரூ.1.19 கோடி வளர்ச்சி திட்ட பணிகள் குமரி ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகர்கோவில், மே 16- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில்  குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் மே 16 வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற் கொண்டார்.  கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சிக்குட்பட்ட மேலகடியப்பட்டிணம் கடற்கரை  பகுதியில் நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் மீனவர்கள் இளைப் பாறும் நிழற்கூடத்தினை ஆய்வு மேற் கொண்டதோடு, அருகாமையில் உள்ள பழுதடைந்த கட்டிடத்தினை மேம்படுத்துவ தற்கு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து கீழகடியப்பட்டணம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.97 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும்  அங்கன் வாடி கட்டிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.13 இலட்சம் மதிப்பில் மேலகடி யப்பட்டிணம்  பகுதியில் 60,000 லிட்டர் கொள் ளளவு கொண்ட நீர் தேக்கத் தொட்டியும், ரூ.28.65 இலட்சம் மதிப்பில் முட்டத்தில் 1 இலட்சம் கொள்ளளவு கொண்ட  நீர்தேக்க தொட்டியும் நேரில் பார்வையிடப் பட்டது.  முட்டம் ஆரம்ப சுகாதார மைய வளாகத்தில் 15ஆவது நிதிக்குழு சுகாதார  நிதியின் கீழ் ரூ.56 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார மையத்தினை ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அனைத்து  பணிகளையும் விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.  நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் கிறிஸ்டோபர் ராஜேஷ், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;