districts

img

புதுச்சேரி பல்கலைக்கு அவசர அவசரமாக துணைவேந்தர் நியமனம் ஏன்? மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

புதுச்சேரி பல்கலைக் கழ கத்திற்கு அவசர, அவசர மாக துணைவேந்தரை நியமிக்க முயலும் ஒன்றிய உயர் கல்வித்துறையின் நடவ டிக்கையை தடுக்க கோரி தலைமைத் தேர்தல் ஆணை யருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பி யுள்ளது.

கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் அனுப்பியுள்ள அக்கடிதத்தில் கூறியுள் ளதாவது:

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையானது,  மத்தியப் பல் கலைக்கழகங்கள் மற்றும் மத்  திய நிதியுதவி பெற்று நிர்வ கிக்கப்படும் உயர்கல்வி நிறு வனங்களுக்கான துணை வேந்தர்கள்/இயக்குனர்கள் நியமனங்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. 

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலை, 17 மே 2024 அன்று நடத்திட கல்வி அமைச்சகத்தின் உயர்  கல்வித் துறை திட்டமிட்டுள் ளது என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன.

நாட்டில் பொதுத்தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது, நடைமுறையில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிகள், இத்தகைய நிய மனங்களை அனுமதிக்காது. இந்நிலையில், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்ந்தெடுப்ப தற்கான முயற்சி, குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின்  இறுதி நாட்களில், பொதுத் தேர்தல்கள் இன்னும் 3 வாரங்  களில் முடிவடையும் பின்னணி யில் மிகவும் அதிர்ச்சியூட்டுவ தாக உள்ளது. 

புதுச்சேரி பல்கலைக் கழ கத்திற்கு துணைவேந்தர் நிய மனம்,  2024 ஜூன் 5ம் தேதிக்குள் செய்ய வேண்டிய அவசர அவ சியம் ஏதும் இல்லாததால், இந்த விஷயத்தில் தேர்தல்  ஆணையம் தலையிட்டு, மாதிரி நடத்தை விதிகள் நீக்  கப்படும் வரை நேர் காணலை நடத்துவதை தவிர்க்குமாறு இந்திய அரசின் கல்வித் துறைக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

;