சர்வதேச காது கேளாதோர் தினத்தையொட்டி சங்கத்தின் செயலாளர் பாசித் தலைமையில் செய்கை மொழி அவசியத்தை மக்களிடத்தில் கொண்டு செல்லும் விதமாக பிரசுரங்கள் புதுச்சேரியில் வெளியிடப்பட்டன. சங்கத்தின் தலைவர் சரவணன், தொழிற்சங்க தலைவர் ராஜாங்கம், டெஃப் எனேபிள் பவுண்டேஷன் நிர்வாகி ஞானவேல், ஈட்டான் இந்தியா நிறுவன நிர்வாகி அப்பாஸ், அபிலா, ஸ்வர்ணா, மதன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்கை மொழி பரப்பாளர்களை கவுரவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.