districts

img

புதுச்சேரியில் பாஜக கொக்கரிப்பு அடங்கியது இந்தியா கூட்டணி அமோக வெற்றி!

புதுச்சேரி, ஜூன் 5- புதுச்சேரி மக்களவைத் தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில்  போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பா ளர் வைத்திலிங்கம் 1 லட்சத்து 36  ஆயிரத்து 516 வாக்குகள் கூடுதலா கப் பெற்று அமோக வெற்றி பெற்  றுள்ளார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட மாநில உள்துறை அமைச்சர் நமச்சி வாயம் படுதோல்வி அடைந்தார். புதுச்சேரியில் மொத்தமுள்ள 10 லட்சத்து 23 ஆயிரத்து 699  வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயி ரத்து 724 பேர் வாக்களித்தனர். இதில், இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெ. வைத்தி லிங்கம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 5 வாக்குகளைப் பெற்றார்.  பாஜக அமைச்சர் நமச்சிவாயம் 2 லட்சத்து 89 ஆயிரத்து 489 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  மேனகா 39 ஆயிரத்து 603 வாக்கு களையும், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 25 ஆயிரத்து 165 வாக்குகளையும் பெற்றனர். ஏனாம், இந்திரா நகர் சட்ட மன்றத் தொகுதிகளை தவிர்த்து  இதரத்தொகுதிகள் அனைத்திலும் வைத்திலிங்கம் தொடக்கம் முதல்  முன்னிலை பெற்றார். வெற்றி பெற்ற அவருக்கு தேர்தல் நடத்தும்  அதிகாரியான குலோத்துங்கன் சான்றிதழ் வழங்கினார்.

;