புதுக்கோட்டை, செப்.4 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 75 ஆவது சுதந்திர தின விழா கருத் தரங்கம் சனிக்கிழமை மாலை புதுக்கோட் டையில் நடைபெற்றது. புதுக்கோட்டை காமராஜபுரத்தில் நடை பெற்ற கருத்தரங்கிற்கு சங்கத்தின் நகரத் தலைவர் ஜெ.மாணிக்கம் தலைமை வகித் தார். புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, மாவட்டத் தலைவர் ரா.மகாதீர், இந்திய மாண வர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்த னன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப.சரவணன், லதா ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ‘இந்திய விடுதலை போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை, ‘என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்’ என்ற தலைப் பில் தமுஎகச மாநில துணை தலைவர், கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். நிகழ்வில் கே.ஏ.சத்தியபா லன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.