districts

பெண்ணிடம் ரூ.8.05 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

புதுக்கோட்டை, செப்.6 - பணம் கூடுதலாக தருகிறோம் எனக் கூறி  இளம்பெண்ணிடம் ரூ.8.05 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை முதல் வீதியைச் சேர்ந்தவர் அர விந்தன் மனைவி சிந்து(25). இவரது செல்போனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இணையவழி வர்த்தகம் குறித்த அந்தக் குறுஞ்செய்தியில் இருந்த இணைப்பில் அந்தப் பெண் இணைந்துள்ளார். அதன்வழியே, ரூ.200 செலுத்தினால் கூடுதலாக ரூ.100 சம்பாதிக்கலாம் என தெரி விக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிந்து முதல் முயற்சியாக ரூ.200 செலுத்தியுள்ளார். அவ ரது வங்கிக் கணக்குக்கு ரூ.300 திரும்ப வந்துள்ளது. இதேபோல, கூடுதலாக பணம் சம்பாதிக் கும் நோக்கில் 43 முறையாக ரூ.8.05 ட்சம் வரை  தனது வங்கிக் கணக்கில் இருந்து பணம்  செலுத்தியுள்ளார். ஆனால், பணம் எதுவும்  திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த சிந்து, மாவட்ட இணையவழிக் குற்றப்  பிரிவு காவல்துறையில் திங்கள்கிழமை புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் செவ்வாய்க் கிழமை வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

;