புதுக்கோட்டை, டிச.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டிற்கு வருகை தந்த மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் புதனன்று மூத்த தோ ழர்களின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகு தியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராக வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய வர் தோழர் எஸ்.ராஜசேகரன். இவரை குளமங்க லத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து நலம் விசாரித்தார். மேலும், புதுக்கோட்டை நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய தோழர் சண்முகபழனியப்பனையும் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், சு.மதியழகன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.