districts

img

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி: எம்.சின்னதுரை எம்எல்ஏ வழங்கினார்

புதுக்கோட்டை, ஜூலை 14 - புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக் கிழமை வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் வ.பரிமளம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் முகமது இம்தியாஸ், பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகாலெட்சுமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வெ.தங்கம் வரவேற்க, ஆசிரியர் கே.ஆர்.ரமேஸ் நன்றி கூறினார்.