நீலகிரியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கோத்தகிரி டானிங்டன் பாரதி நகரை சேர்ந்த முரளிதரன் (வயது 46) என்பவர் வரலாறு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் படித்து வரும் மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆசிரியரின் இந்த செயலால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிகள், இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து தலைமை ஆசிரியர் சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தின் பேரில் போலீசார் முரளிதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர்.