உதகை, நவ.29- மலை காய்கறிகளுக்கு பயன் படுத்தப்படும் மருந்துகள் மற்றும் ரசா யன உரங்களின் விலை உயர்ந்துள் ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயி லைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. மாவட்டத்தில் 40 சதவிகித விவ சாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள் ளிட்ட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில், பெரும்பாலான விவசாயிகள் சாதாரணமாக அரை ஏக்கர் முதல் 2 ஏக்கர் வரையிலேயே, குறைந்த முதலீட்டை வைத்துதான் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விவசாயித்திற்கு தேவையான ரசாயன உரங்கள், மருந்துகள் மற்றம் பூச்சிக்கொல்லி களின் விலை பல மடங்கு உயர்ந்துள் ளது. இதனால், விவசாயிகள் கடு மையாக பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் இந்த விலை உயர்வால், பயிர்களை பாது காக்க முடியாமலும், போடப்பட்ட முத லீட்டை எடுக்க முடியாமலும் திணறி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர் வாகம் தலையிட்டு உரிய குறைவான விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.