உதகை, டிச.29- ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சா லையை மீண்டும் இயக்க வலியுறுத்தி தொழி லாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை சாண்டிநல்லா பகுதியில் ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற் சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சா லையில் 400க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழி லாளர்களின் வேலை பறிக்கப்பட்டது. இத னால் தொழிலாளர் குடும்பங்கள் வறுமையில் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்கி வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று உதகை யில் உள்ள சுதந்திரத்திடலில் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜரத்தினம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை இடைக்குழு செயலாளர் எல்.சங்கரலிங்கம் போராட்டத்தை துவக்கி வைத்தார். போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளர் யூ.மூர்த்தி, நிர்வாகிகள் கே.ராஜேந்திரன், சி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் வாழ்த்திப் பேசினர். முடிவில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சுந்தரம் நிறைவுரை யாற்றினார்.