உதகை , நவ. 27- உதகை அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகிலுள்ள வாழைத் தோட்டம் பகுதியை சேர்ந்த நாதன் என்பவரின் மகன் ஈஸ் வரன் (24). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று கட்டாய தாலி கட்டியது டன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறு மியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்,கூடலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் ஈஸ்வரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட மக ளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழ னன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து குற் றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட் டது.