உதகை , நவ. 28 - புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நீல கிரி மாவட்ட பேரவைக் கூட்டம் சனியன்று கூடலூர் ஆறுமுக வள்ளல் நினைவு அரங் கில் மாவட்ட தலைவர் கே.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செய லாளர் சி.பரமேஸ்வரி, மாநில துணை செய லாளர் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.ஆஸரா, பொருளாளர் க.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாவட்ட துணைத் தலை வராக சிவதாஸ், மாவட்ட இணைச் செயலா ளராக கெர்ஸ்ஹோம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர். முன்னதாக, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத் தையே தொடர வேண்டும். காலிப் பணியி டங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.