உதகை, டிச.9- பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழி யர்கள் புதனன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரி யும் ஒப்பந்த ஊழியர்களின் நிலுவை ஊதி யம் தொடர்பாக நவ.5ஆம் தேதியன்று ஏற்பட்ட உடன்பாட்டை உடனே அமல் படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதி களில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டனர்.
இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஜேக்கப் மோரிஸ், பொருளாளர் பிரின்ஸ், துணை செயலாளர் ரவிக்குமார், குன்னூர் கிளை செயலாளர் கே.ஆர்.ரவி, கோத்தகிரி கிளைத் தலைவர் சுபீர், செயலாளர் இரு தயம், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட் டத் தலைவர் கென்னடி, செயலாளர் பி. விஜயகுமரன், உதகை கிளைச் செயலாளர் எஸ்.ஸ்மித் உள்ளிட்ட திரளாளோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலை யம் முன்பாக புதனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் மாவட்ட நிர்வாகி என்.ராமசாமி தலைமை வகித்தார். இதில், தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் முத்துக்குமார், ரமேஷ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் பா.சௌந்தர பாண்டியன், மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
கோவை
கோவை தலைமை தொலைபேசி நிலை யத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கிளைத் தலைவர் யாகூப் உசேன் தலைமை வகித்தார். இதில், பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மகேஸ்வரன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வெங்கட் ராமன், பாலசண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், மேட்டுப் பாளையம், கணபதி, பொள்ளாச்சி, கோவை புதூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.