districts

img

ராசிபுரம் ரயில் நிலையத்தில் நிற்காத ரயில்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஆவேச ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச. 28-  ராசிபுரம் ரயில் நிலையத்தில் வழக் கம்போல் ரயில்கள் நின்று செல்ல நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரயில் நிலையம் தொடங்கப்பட்டு கடந்த  8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு பாலக்காடு – சென்னை (02652),  சென்னை – பாலக்காடு (02651), நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் (16340), ராமேஸ்வரம் ஓகா எக்ஸ்பிரஸ் (16734) உள்ளிட்ட ரயில்கள் ராசிபுரம்  நடைமேடையில் நின்று பயணிகளை  ஏற்றி சென்று வந்து கொண்டிருந்தது.  இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக மேற்கண்ட ரயில் கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதால் ராசிபுரத்தில் நிற்காமல் சென்று விடுகிறது. இதனால்,  ராசிபுரம் சுற்றுவட்டாரப் பயணிகள் கடும்  சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பயணிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் அனுப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ராசிபுரம் ரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரம் பிரதேசக்குழு செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி, ராசிபுரம் நகர செய லாளர் சி.சண்முகம், மூத்த தலைவர் எம்.ஜி.ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;