districts

img

பஞ்சப்படிகளை நிறுத்தி வைப்பை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.13- பஞ்சப்படிகள்  நிறுத்தி வைத்துள் ளதை கண்டித்து அஞ்சல் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

ஊழியர்களின் பஞ்சப்படிகளை  நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், பிஓஎஸ்பி மேளா, ஆர்பிஎல் மேளா  என்ற பெயர்களில் வாரம்தோறும் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ண யிக்கப்பட்டு இலக்கினை அடைய நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதை கைவிட வேண்டும்.

கோட்ட  அதிகாரிகளால் ஊழியர்கள் மிரட் டப்படுவது நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தபால் நிலையம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழி யர் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் வி.ஈஸ்வரன், ஆர்.ஏ.துரைசாமி, ஜி.சீ.வெள்ளையன், எம்.ஜெகதீஸ்வ ரன், எஸ்.விஜயகுமார், கே.சி.ராமச் சந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.