நாமக்கல், நவ. 29- படைவீடு பேரூராட்சியில் ரூ.2.59 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி அடிக் கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம், படைவீடு பேரூராட்சியில் ரூ.2.59 கோடி மதிப் பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலாவ தாக நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் அம்மன் கோவில் முதல் அல்லிநாயக்கன் பாளையம் வரை தார்ச்சாலை அமைக்கும் பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நத்தமேடு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத் தகக் கட்டடம் கட்டும் பணி, பச்சாம் பாளையம் புதுவலவு பகுதியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், ரூ.1 கோடி மதிப்பீட்டில் என்.எச்-47 முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம் வழியாக பழைய வலவு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.48.50 லட்சம் மதிப்பீட்டில் கல்லுகட்டியூர், மரவன் பாளையத்தான்காடு ஆகிய பகுதிக ளில் சிமெண்ட் சாலை, தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், படைவீடு பேரூ ராட்சி முன்னாள் தலைவர் பி.ஏ. ஜெகநாதன், கால்நடைத்துறை மண் டல இணை இயக்குநர் வி.பி.பொன்னு வேல், பேரூராட்சிகள் உதவி இயக்கு நர் கோ.கனகராஜ், கால்நடைத்துறை உதவி இயக்குநர் அருண் பாலாஜி உட் பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.