districts

img

மோடி வருகையால் வருவாயை இழந்த குமரி மாவட்ட மீனவர்கள்- வியாபாரிகள் இழப்பீடு வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், மே 30- தேர்தல் விதி  முறைகளை மீறி  குமரி முனை யில் தியானம் என்கிற பெய ரில் பிரதமர் மோடி மேற்  கொள்ளும் மவுனப் பிரச்சாரத்தை  தேர்தல் ஆணையம் தடுப்பது டன், பாதிக்கப்பட்ட மீனவர்க ளுக்கு இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து கட்சியின் கன்னி யாகுமரி மாவட்டச் செயலாளர் ஆர்.  செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

வருவாய் இழந்த மீனவக் கிராமங்கள்

தேர்தல் விதிமுறைகளை மீறி,  குமரி முனைக்கு வருகை தந்த பிர தமர் மோடி மூன்று நாட்கள் விவே கானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்ய உள்ளார். இதை யொட்டி மீனவர்கள் கடலுக்கு செல் லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் வாவத்துறை, கோவளம், சின்னமுட்டம், புதுகிரா மம் உள்ளிட்ட கடற்கரை கிராம மக்  கள் இதனால் வருவாய் இல்லாமல்  தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே 15 நாட்களுக்கு மேல் கடல் சீற்றம் காரணமாக மீன்  பிடிக்க தடை விதிக்கப்பட்டது. நடு வில் ஒருநாள் மட்டும் மீன் பிடிக்கச்  சென்ற நிலையில் மீண்டும் மோடி யின் வருகையை காரணமாக்கி தடை விதிக்கப்பட்டுள்ளது. இத னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகுகள்,  வள்ளங்கள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பறிபோனது

மீன்வளத்துறை, காவல்துறை  கடுமையான கெடுபிடி காட்டுவ தால் சுமார் பத்தாயிரம் மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் வருவா யின்றி தவிக்கின்றனர். இதனால்  பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க வேண்டும்.

காவல்துறை, தமிழக கடலோ ரக் காவல் படை, இந்திய கடலோர  காவல் படை, கடற்படை, பிரதமரின்  சிறப்புப் பாதுகாப்பு படை உட்பட  பத்து அடுக்கு பாதுகாப்பு அளிப்ப தாக செய்திகள் வருகின்றன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கள் ஏதும் இல்லாமல் வியாபாரி களை அச்சுறுத்தி கடைகளை மூட  வைத்துள்ளனர். தெருவோர வணி கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் நூற்றுக்கணக்கா னோரின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. ஆட்டோ, கார் போன்ற  வாகனங்கள் இயக்கமும் முடக்கப்  பட்டுள்ளதால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகளும்  கடும் அவதி

கோடை விடுமுறை நிறைவ டைய ஒரு வார காலமே உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். சர்வ தேச சுற்றுலாத் தலமான குமரி  முனையில் முக்கடல் சங்கமத்தை யும் விவேகானந்தர் பாறை உள்  ளிட்ட இடங்களையும் பார்வையிடு கின்றனர். குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொள்கின்றனர். வெளி நாட்டுப் பயணிகளும் அதிக அள வில் வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணி களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மோடியின் குமரி வருகை  உள்ளது. தியானம் என்கிற பெயரில்  ஊடகங்களைப் பயன்படுத்தி கடை சிக் கட்ட தேர்லுக்கான பிரச்சாரம் மேற்கொள்வதை தேர்தல் ஆணை யம் தடுத்து நிறுத்த வேண்டும். குறைந்தபட்சம் தியானம் என்னும் தனிமனித செயல்பாட்டை ஊட கங்கள் மூலம் பிரச்சாரம் செய்வ தையேனும் தடுக்க வேண்டும்.

இவ்வாறு ஆர். செல்லசுவாமி வலியுறுத்தியுள்ளார்.
 

;