நாகப்பட்டினம், செப்.15- மறைமலையடிகளின் 72-ஆவது நினைவு தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள்-கலைஞர் சங்கம் அஞ்சலி செலுத்தப்பட்டது. தனது வாழ்நாளெல் லாம் தமிழுக்காகவும், தனித் தமிழுக்காகவும் பங்களிப்பு செய்தவர். தமிழ் இலக்கிய உலகத்திற்கு பல்வேறு ஆய் வுக் கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள் தந்தவர். ஞான சாகரம் என்ற இதழ் நடத்தி யவர் பின்னாளில் அறிவுக் கடல் என மாற்றிக் கொண் டார்.முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி உள்ளிட்ட சங்க இலக்கியநூல்களை ஆய்வு ஆராய்ச்சி செய்தவர்.சாகுந்தலம் என்றமொழி பெயர்ப்பு நாடக நூலையும் எழுதியுள்ளார். மறைமலையடிகளின் நினைவைப்போற்றும் வகை யில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அவரது மகன் மறை.பச்சையப்பன், காந்தி மதி உள்ளிட்ட உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், தமு எகச மாவட்டத் கவிஞர் ஆவ ராணி ஆனந்தன், மாவட்டச் செயலாளர் ஆதி.உதய குமார், மாவட்டத் துணைத் தலைவர் கே.ட்டி.முருகை யன், மாவட்டத் துணைச் செயலாளர் என்.பாபுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.