districts

வாகன தணிக்கையில் பணம் பறிமுதல்

தேனி, பிப்.7- கூடலூர் கம்பம் மெயின் ரோட்டில் வடக்கு காளியம்மன் கோவில் அருகே அதிகாரிகள் ்வாகனத் தணிக்கையில் ஈடு பட்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் கட்டப்பணையில் இருந்து கம்பம் நோக்கிவந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் ்உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்ததுகாரைஓட்டி வந்த அன்சலாம் என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அவர்தனதுசொந்த தேவைக்காக அந்த பணத்தைகொண்டு வந்ததாக கூறினார். ஆனால் அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்ப டைத்தனர்.