districts

img

தூத்துக்குடி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா

தூத்துக்குடி, மே 31 தூத்துக்குடி துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் மே தின விழா, பெருந்துறைமுக பொன்விழா, சங்கத்தின் 47ஆவது ஆண்டு விழா, சிஐடியு 55ஆவது அமைப்பு தின விழா, எழுத்தாளர் எம்.செல்லதுரைக்கு பாராட்டு விழா  புதிய துறைமுக சமுதாயக் கூடத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது.

மே தின கொடியினை மூத்த தோழர் கே.பொன் ராஜ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்விற்கு துறைமுக லேபர் டிரஸ்டியும் துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் தலைவருமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.காசி வரவேற்று பேசினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன் பெருந்துறைமுக பொன்விழா கருத்தரங்கத்தை துவக்கி வைத்து பேசினார்.

 வஉசி துறைமுகம் விண்ணை தொடும் வளர்ச்சி என்ற தலைப்பில் வஉசி துறைமுக ஆணையத்தின் தலைமை பொறியாளர் ரவிக்குமார், துறைமுகங்களில் எதிர்காலமும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் அகில இந்திய நீர்வழி போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நரேந்திர ராவ், பொதுத்துறைகள் ஏற்படுத்திய சமூகப் புரட்சி குறித்து துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினருமான பி.சம்பத், நெருக்கடிகளை தகர்த்து முன்னேறுவோம் என்ற தலைப்பில் அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து சம்மேளன செயலாளர் ரசல் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

அதனைத் தொடர்ந்து எழுத்தாளர்  செல்வதுரையை பாராட்டி கௌரவிக்கப்பட்டது . நிறைவாக துறைமுக ஜனநாயக ஊழியர் சங்க செயலாளர் ஆறுமுக நயினார் நன்றி கூறினார். டி.கே.ரங்கராஜன்  இந்நிகழ்வில் கலந்துகொண்ட  முன்னாள் எம்பி ரங்கராஜன் பேசுகையில்  நாடு முழுவதும் 85 இடங்களில் மே தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப் பட்டது. பழைய முறையில் வேலை செய்து எந்த பலனும் இல்லை, நம்முடைய புரிதலிலும்  மற்றும் வேலையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

 தற்போது நவீன முறையிலான சுரண்டல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுரண்டல் நவீனமயமாக  ஆகியுள்ளது.   குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல் தற்போது பணி செய்து வருகின்றனர். இன்றைய தினம் 90 சதவீத மக்கள் திரட்டப் படாத உழைப்பாளி மக்கள் ஆவர். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொண்டு நமது செயலை உருவாக்க வேண்டும்,  குறிப்பிட்ட தொழிலாளிக்கு அல்ல, சமுதாயத்திற்கே கோபத்தை உருவாக்க வேண்டும்,

12 மணி நேர வேலை என்பது தற்போது பெரும்பான்மையான இடங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.  நவீன சுரண்டல் தன்மையை நாம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தொழிலாளர்களை பாதுகாக்க நமது சங்கங்கள், தொழிலாளர்களை ஒன்றிணைத்து பலப்படுத்த வேண்டும். என்றார்.   

;