districts

img

தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

மன்னார்குடி, அக்.2 - தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள்  பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக திருவா ரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. மன்னார்குடி ஒன்றிய திக தலைவர் தமிழ்ச்செல் வன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர்  ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ. கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் எஸ்.என்.உத்திராபதி வரவேற்றார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், வழக்கறி ஞர்கள் பூவை.புலிகேசி, இராம.அன்பழகன் சு.சிங்கார வேலு ஆகியோர் பேசினர். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர்  ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் மு.இராமதாசு நன்றி கூறினார்.