திருவாரூர், மார்ச் 1- கூத்தாநல்லூர் ஒன்றியம் மரக்கடை பகுதி பாரதி நகரில் வசித்த சிஐடியு ஆட்டோ சங்க உறுப்பினர் எம்.குணசேக ரன் செவ்வாய்க்கிழமை (பிப்.28) கால மானார். அன்னாரது மறைவு செய்தி அறிந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா ஆகியோர் குணசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி னர். மறைந்த குணசேகரின் குடும்பத்தினருக்கு திரு வாரூர் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் குடும்ப நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.கே.செல்வம், டி.வீரமணி, அம்பிகாபதி, தியாகராஜன், சக்திவேல், துரை, புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.