districts

img

விவசாய சங்க உறுப்பினர்கள்  சந்தா வழங்கும் நிகழ்ச்சி  

திருவாரூர், அக்.6- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் நகர  குழு சார்பில் உறுப்பினர்களின் சந்தா வழங்கும் நிகழ்ச்சி  நகரச் செயலாளர் என்.ராஜசேகர் தலைமையில் நடை பெற்றது.  நிகழ்வில் 1002 விவசாய சங்க உறுப்பினர்களிடம் சந்தா தொகையினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாய சங்க  மாவட்டச் செயலாளர் எம்.சேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் கே.ஜி.ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம், விவசாய சங்க  மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்ச்செல்வி, திருவாரூர்  நகரப் பொருளாளர் எஸ்.ராமசாமி, தமுஎகச வட்ட தலை வர் எம்.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  உறுப்பினர்களின் சந்தாவை நிறைவு செய்த நகர்குழு தோழர்களுக்கு மாவட்டச் செயலாளர் வாழ்த்து களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

;