districts

img

வாழவந்தான் கோட்டையில் வாழமுடியவில்லை!

திருவள்ளூர், செப் 9- வாழவந்தான் கோட்டை யில் வாழ முடியவில்லை என்று பழங்குடியின மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இவர்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் சிதல மடைந்துள்ளதால் அவற்றை  சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி  வெள்ளியன்று (செப் 9) மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை அலுவல ரிடம் மனு வழங்கினர். திரு வள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம் கச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டையில்  கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 53 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. தொகுப்பு வீடுகளின் உட்புறம் மற்றும் வெளிப் புறம் சிமென்ட் கலவை பூசு வேலை செய்யப்பட வில்லை.கதவுகளும் அமைக்கப்படவில்லை.இதனால் அனைத்து வீடுகளும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை காலத்தில் மழை நீர் கசிந்து வீடு முழுவதும் ஈரமாக உள்ளதால், இரவில் தரையில் படுத்து தூங்க கூட முடியாத நிலையில் உள்ளது.இதனால் குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் பாதிக் கின்றனர். வீடு விரிசல் ஏற்பட்டுள்ளதால் எந்த நேரத்திலும் சுவர்கள் இடிந்து, உயிர் சேதத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதனை அதிகாரிகள் உட னடியாக சீரமைக்க வேண்டும். மேலும் குடிசை வீடு களில் வாழ்ந்து வரும் 25 பழங்குடி இன குடும்பங்க ளுக்கு புதிதாக தரமான முறையில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலர் கலைச் செல்வியிடம் வலியுறுத்தி னர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரி ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரிடம் நிதியை பெற்று உரிய நட வடிக்கை எடுப்பதாக தெரி வித்துள்ளார். இதில் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். தமிழ்அரசு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலை வர் இ.எழிலரசன், மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;