districts

img

கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூன் 23- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கள்ளச் சாராய  மரணங்கள்  ஏற்பட காரணமாக இருந்த காவல்துறையினரை கண்டித்து  மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 21),  ஆரணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளச்சாராயத்தை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். கள்ளச்சாராய வியாபாரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதற்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சசிகலா தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா பொன்னேரி பகுதி குழு உறுப்பினர் தேவி, நாகலட்சுமி உட்பட்ட பலர் பேசினர்.