districts

img

தனியார் ஆலை நுழைவு வாயில் முன்பு பிரேதத்துடன் போராட்டம்

திருவள்ளூர், செப்.24- திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள சாணார்பாளையம் கிராமத்தில் தனியார் கண்டெய்னர் பெட்டி இறங்குதளம் கம்பெனி உள்ளது. இங்கு வெளிநாட்டிலிருந்து வரும் கண்டெய்னர் பெட்டிகள் இருப்பில் வைக்கப்படுகின்றன. இந்த கம்பெனியில் பணி செய்து வந்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிமன்றம் சிங்கிலி மேடு பகுதியை சேர்ந்த குமரன் (40), கடந்த 20 ஆம் தேதி  பீகார் செல்லும்  பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பகுதியில் அடிப்பட்ட அவரது உடல் கும்மிடிப்பூண்டி அருகே ரயில்வே காவல்துறையினரால் மீட்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.  இதற்கிடையில், கம்பெனி வேலைக்கு சென்ற குமரன் வீடுதிரும்பவில்லை என்ப தால், அவரது உறவினர்கள் பல இடங்களில்  தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், அவர் வேலை செய்த தனியார் கம்பெனிக்கு சென்றபோது முறையாக பதில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், ரயிலில் அடிப்பட்டு இறந்தவர் குமரன்தான் என்பதை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து குமரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமரனின் பிரேதத்தை எடுத்து வந்த   வாகனத்தோடு தனியார் கம்பெனி நுழைவு  வாயல் அருகே உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ  இடத்துக்கு வந்த பொன்னேரி பொறுப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர் கிரியா சக்தி தலைமையிலான காவலர்கள் சந்தேகத்தின் பேரில் குமரன் வேலை கம்பெனியை சேர்ந்த ஜெய்,பிரதீப் என்ற இருவரை காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். அதில் தப்பிய ஒருவர் அந்த கம்பெனிக்குள் ஒளிந்துக்கொண்டார். பிறகு, அந்த நபரை அரைமணி நேரம் தேடி  கண்டுபிடித்தனர்.

;