திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பாலியப்பட்டு ஊராட்சி கொளத்தூர் ஓடை புறம்போக்கு இடத்தில் கட்டியுள்ள வீடுகளை அகற்றுவதை நிறுத்தக் கோரி செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எ.லட்சுமணன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்தனர்.