districts

img

மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுக சிஐடியு வலியுறுத்தல்

திருப்பூர், டிச. 28 - குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்டிக்கர், வேகக் கட்டுப் பாட்டு கருவிகளை மட்டுமே வாங்கி வாகனங்களுக்குப் பொருத்த வேண்டும் என்ற விதிமுறைக்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடுமலை சிஐடியு அலுவலகத்தில் ஞாயிறன்று உடுமலை நகரம், ஒன்றியம், குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதி மோட்டார் வாகன தொழிலாளர்களின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு, மாவட்டத் தலை வர் எஸ்.விஸ்வநாதன், உள்ளாட்சி சங்க மாவட்டப் பொரு ளாளர் கே.தண்டபாணி, சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் எஸ்.ஜெகதீஸ், சங்கத் துணைச் செயலாளர் எஸ்.சுப்பிர மணியன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வி.விஸ்வ நாதன் ஆகியோர் மோட்டார் தொழில், தொழிலாளர் பிரச்ச னைகள் குறித்து உரையாற்றினர்.

இதில் மத்திய, மாநில அரசுகள் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். நலவாரியப் பயன்களை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ,இப்பேரவையில் உடுமலை வட்டார மோட்டார் தொழிலாளர் சங்கத் தலைவராக எம்.ராமர், செய லாளராக எஸ்.சுப்பிரமணியன், பொருளாளராக கே.இயேசு ராஜ், துணைத் தலைவர்கள் கே.தண்டபாணி, பி.முருகன், பி.பிரபாகரன், துணைச் செயலாளர்கள் வி.விஸ்வநாதன், பி.மணிகண்டன், எம்.ராஜா முகமது உள்ளிட்டோர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

;