districts

பேருந்து கட்டணத்தைக் குறைப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளிப்பு

திருப்பூர், டிச. 29 – திருப்பூரில் வெளியூர் மற்றும் புறநகர், நகரப் பேருந்துகளில் விதிமுறைகளுக்குப் புறம்பாக அதிகரிக்கப்பட்ட கட்டணத்தைக் குறைக்கவும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசுப் போக்குவரத்து மண்டல அதிகாரி உறுதி யளித்துள்ளார். திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டிப் பணிகள் நடைபெறும் நிலையில் ஏற்கெனவே இருந்த பழைய, புதிய பேருந்து நிலை யங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை பல்வேறு பகுதிகளில் பிரித்து தற்காலிக பேருந்து நிலையங்களில் நிறுத்துகின்றனர். இதைக் காரணமாகக் காட்டி வெளியூர் மற்றும் நகர, புறநகரப் பேருந்துகளில் கட்ட ணத்தையும் அதிகரித்துள்ளனர். எனினும் இது பற்றி வெளிப்படையான முறையான உத்தரவோ, அரசாணையோ வெளியிடப் படவில்லை.

மேலும் பயணிகளும் அலைக் கழிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் மாநில அரசின் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசுப் போக்கு வரத்து கோட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட் டது. அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு ஆகியோர் மாநில அரசின் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சமய மூர்த்தியை கடந்த வாரம் சென்னையில் நேரில் சந்தித்து இக்கோரிக்கை குறித்து முறையிட்டனர். அவர் கட்டணத்தைக் குறைக்கவும், தேவையான பேருந்து வசதி கள் செய்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், திருப்பூரில் அரசுப் போக்குவரத்து மண்டல மேலாளரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாநகரச் செயலாளர் டி.ஜெய பால் உள்ளிட்டோர் நேரில் சென்று சந்தித்து இதுகுறித்து பேசினர். அப்போது கோயில் வழி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துக ளுக்கு உரிய கட்டணத்தை பழைய விகி தத்தில் குறைத்து நிர்ணயிப்பதாக வாய் மொழி உறுதியளித்தனர். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்து களை, பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அலைக்கழிப்பதை தவிர்க்க வெளியூர், நகரப் பேருந்துகள் ஒரே இடத்தில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியு றுத்தினர். இதுதொடர்பாக, ஆவன செய்வ தாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக் கப்பட்டது.

;