districts

img

மழை வெள்ளம் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்த பாலு இன்னவேசன் குடியிருப்பு: தீர்வு காண கோரிக்கை

திருப்பூர், நவ. 28- திருப்பூர் மாநகராட்சி 7ஆவது வார்டு பாலு இன்னவேசன் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை கட்டு மானம் அரைகுறையாக நிறுத்தப்பட்ட தால் மழை வெள்ளம், சாக்கடை கழிவு நீர் சேர்ந்து வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறு பாலு இன்னவேசன் குடி யிருப்போர் நலச் சங்கம் கோரியுள் ளது. இது தொடர்பாக பாலு இன்னவே சன் குடியிருப்போர் நலச் சங்கத்தி னர் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது, திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை பாலு இன்னவேசன் குடியிருப் பில் மொத்தம் 71 வீடுகள் உள்ளன.

கடந்த 10 வருட காலமாக சாக்கடை கால் வாய் சரி வர அமைத்துத் தராத கார ணத்தால் இங்கு வாழும் மக்கள் பெரிய அளவுக்கு அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மாநக ராட்சி நிர்வாகம் மழைநீர் வசதி ஏற்ப டுத்துவது என்ற பெயரில் முறையான திட்டமிடல் இல்லாமல் பணி செய்தது. அந்த பணி பாதியிலேயே நிறைவு பெறா மல் தடைபட்டுள்ளது. இதில் சாக்கடை வெளியே செல்லும் வழி இல்லாமல் உள்ளது. எனவே இந்த குடியிருப்பில் சாக்கடை கழிவுநீர் செல்லும் பாதை முற்றிலும் தடைப்பட்டு விட்டது. இந்த மோசமான சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் சக்திமிக்க மின்மோட்டார் துணை கொண்டு குடியிருப்பு சாக் கடை கழிவுநீரை இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.

இப்போது மழை காலமாக இருப் பதால் மழை வெள்ளத்தால் தாழ்வான இந்த குடியிருப்புப் பகுதியில் அனைத்து வீடுகளும் சாக்கடை நீர் கலந்த மழைநீர் சூழ்ந்துள்ளது. குறைந்தபட் சம் இரு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை அவதிக்கு உள்ளாகின் றனர். அதிகாரிகள் கள நிலவரத்தை ஆய்வு செய்தும், எவ்விதமான நிரந்தரத் தீர்வும் செய்யாமல் பல வருட காலமாக திட்டத்தை முழுமைப்படுத்தி நிறை வேற்றாமல் காலம் தாழ்த்திக் கொண்டி ருக்கின்றனர்.

எனவே இப்பிரச்சனை யில் மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலு இன்னவேசன் குடியிருப்போர் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;