திருப்பூர், நவ. 24 – பொதுமக்கள் பாதையை ஆக்கிரமித்து தன்னிச்சையாக கோவில் கட்டுமானப் பணிகளை துவங்கும் நபரின் மீது நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டு தியாகி குமரன் காலனி, மேற்கு அன்னையம்பாளையம் பகுதிகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் நீரோடை மற்றும் சுடுகாட்டை, தற்போது தனிநபர் ஒரு வர் கோவில் கட்டுவதாக ஆக்கிரமித்து கட்டுமானப் பணி களை மேற்கொண்டு வருகிறார். எனவே அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்பை மீட்குமாறு அப்பகுதி மக்கள் சார்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க குமரன் காலனி கிளை நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித் தனர்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாந கராட்சி மண்டல உதவி ஆணையர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகரன், திருப்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் டி.சதீஸ்குமார், ஒன்றிய துணைத் தலை வர் ராஜாமணி, வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சந் தோஷ், தியாகி குமரன் காலனி மாதர் சங்கக் கிளை நிர்வாகி கள் பாண்டிதேவி, கஸ்தூரி, மகேஸ்வரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விஜயபுரி கார்டன் கிளைச் செய லாளர் பாண்டுரங்கன், ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். இதுசம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் 1வது மண்டல உதவி ஆணையாளர் ஆகியோர் உறுதியளித்தனர்.