திருப்பூர், டிச. 7 - கொரோனா பொது முடக்க காலத் தில் வங்கிகளில் பெறப்பட்ட கடனுக் கான கூட்டு மற்றும் அபராத வட்டி களை தள்ளுபடி செய்வதுடன், வாடிக் கையாளர்கள் அந்த வட்டியை செலுத்தி யிருந்தால், அதை மீண்டும் அவர்களது கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. அந்த உத்தரவை திருப்பூர் மாவட் டத்தில் அமலாக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட் டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொண் டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், திருப் பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்திய நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முழு மையாக முடங்கி மக்களின் வாழ்வாதா ரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அத்து டன் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், வர்த்தக, வியாபார நிறுவனங்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்தன என்பது தாங்கள் அறிந்ததே. இந்நிலையில், மக்களுக்கும், தொழில் மற்றும் வர்த்தக, சேவைத் துறை யினருக்கும் பொது முடக்கக் கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சிறு, குறு தொழில் துறையினர் உள்பட பல்வேறு தரப்பி னரும் கோரிக்கை விடுத்தனர். இந்தப் பின்னணியில் மத்திய அரசு, வங்கி களில் பெறப்பட்ட கடன், வட்டிகளைத் தள்ளுபடி செய்வதற்கு மாறாக, கடன் களை செலுத்துவதற்கு கால அவகாசம் மட்டும் வழங்கியது. இதையும் அரசு உத்தரவாகத் தராமல் ரிசர்வ் வங்கியின் பொதுவான வழிகாட்டுதலாக மட்டுமே இது அறிவிக்கப்பட்டது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங் கள், மைக்ரோ பைனான்ஸ் நுண்கடன் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை அர சின் இந்த அறிவிப்பைப் பொருட்படுத் தாமல் பொது முடக்கக் காலத்திலும் வட்டி வசூலிப்பதிலும், வட்டியைச் செலுத்தாதவர்களிடம் வங்கிக் கணக் கில் இருந்து தானடித்த மூப்பாக பணத் தைப் பிடித்தம் செய்து கொண்டு, வட் டிக்கு வட்டி, அபராத வட்டியும் வசூலித்த னர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், மத்திய அரசின் அறிவிப் புக்கு மாறாக வங்கி மற்றும் நிதி நிறு வனங்கள் அடாவடியாக வட்டி வசூ லித்த பிரச்சனையில், நியாயம் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் (சிவில்) வழக்கு எண் 825/ 2020 ஆக விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று, இப் பிரச்சனையில் நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல், உத்தரவைப் பிறப்பித் துள்ளது. இந்த வழக்கின்போது, 13 கோடியே 20 லட்சம் பேரின் வங்கிக் கணக்குக ளுக்கு வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப் பட்ட ரூ.4 ஆயிரத்து 300 கோடியை திரும்பச் செலுத்தி இருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளது. குறிப்பாக அனைத்து வங்கி நிறு வனங்கள், பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அதிலும் நகரக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மண்டல கிரா மப்புற வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிதி நிறு வனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நுண் கடன் நிறுவனங்கள் என ரிசர்வ் வங்கி யில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப் பட்ட அனைத்து நிறுவனங்களின் கடன்களுக்கும் இந்தத் திட்டம் பொருந் தும், இந்த வங்கிகளில் சிறு, நடுத்தர, குறுந் தொழில் கடன்கள், கல்விக் கடன், வீட்டு வசதிக் கடன், நுகர்பொருள் கடன், கடன் அட்டை நிலுவை, ஆட்டோ மொபைல் கடன், தனிநபர் கடன், நுகர் வோர் கடன் என பல வகைக் கடன்களுக் கும் இந்த வட்டிக்கு வட்டியாக வசூ லிக்கப்பட்ட தொகையைத் திரும்பத் தரும் திட்டம் பொருந்தும் என உச்ச நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. எனினும் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங் கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து துறைகளிலும் சிறு, குறு தொழில் துறையினர் முதல் தனிநபர் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் வரை, ஆயிரக்கணக்கானோரிடம் கட்டாயப் படுத்தி வட்டிக்கு வட்டி வசூலிக்கப் பட்டுள்ளது அல்லது வங்கிக் கணக்கில் அவர்களது இருப்புத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் முரண்பாடானதும், எதிரா னதும் ஆகும். எனவே, இம்மாவட்டத்தில் ஏற் கெனவே வட்டிக்கு வட்டியாக வசூலிக் கப்பட்ட தொகையை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசு இந்த நிதியை வழங்கியிருக்கும் சூழலிலும், மீண்டும் சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும், வங்கிகள் இத் தொகையை செலுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண் டுள்ளார்.