districts

அவிநாசியில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம்

அவிநாசி, ஜன.16- அவிநாசி மங்கலம் சாலையில் உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் தானம் செய்யப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி மங்கலம் சாலை யில் வசித்து வருபவர் தேவ ராஜ். இவரது மனைவி வசந்தி(60). உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை யில் இருந்து வந்த வசந்தி வெள்ளியனேறு உயிரி ழந்தார். இதையடுத்து குடும் பத்தினர் ஒத்துழைப்புடன் உயிரிழந்த வசந்தியின் கண்கள் தானமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 6 மணி நேரத்திற்குள் வசந்தியின் வீட்டிற்குற்கு வந்த கோவை சங்கரா கண் மருத்துவ மனை மருத்துவ குழுவினர், பாதுகாப்பான முறையில் வசந்தியின் இரு கண்களை யும் தானமாக பெற்றுச் சென்றனர். கண்களை தானம் செய்த வசந்தி தேவராஜ் குடும்பத்தின ருக்கும், அவிநாசி பகுதி  பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.