திருப்பூர், டிச.6- மத்திய அரசின் நாசகர வேளாண்மை சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாய சங்கங்கள் அறிவித் துள்ள டிசம்பர் 8ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை திருப்பூரில் முழு வெற்றி பெறச் செய்யுமாறு அனைத்து தொழிலாளர்கள், வர்த்தகர்களுக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத் துள்ளன. திருப்பூர் ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் ஞாயிறன்று ஏஐடியுசி மாவட்டத் தலைவர் சி.பழனிசாமி தலைமையில் அனைத்து சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் டி.குமார், ஏஐடியுசி செய லாளர் என்.சேகர், எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சிதம்பரசாமி, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் சிவசாமி, பொரு ளாளர் கோபால்சாமி, எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் மாவட்டச் செயலாளர் சம்பத் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்கள் இந்திய விவசாயத்தை கார்பரேட்டு களின் பிடிக்குக் கொண்டு சென்று விவ சாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக் கக் கூடியவை ஆகும். இதற்கு எதிராக விவசாயிகள் வரலாற்றுச் சிறப்பு மக்க போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகின்றனர். நியாயமான விவசாயி களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்ப தற்கு மாறாக, இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய, பேச்சு வார்த்தை என சொல்லி தாமதிக் கும் உத்தியை பாஜக அரசு பின்பற்று கிறது. இந்நிலையில், வரும் 8ஆம் தேதி பாரத் பந்த் போராட்டத்தை விவசாயி கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது. எனவே திருப்பூரில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களும் அன்று ஒரு நாள் தங்கள் வேலையை நிறுத்தியும், வியாபாரிகள், வர்த்த கர்கள் கடைகளை அடைத்தும் விவ சாயிகளின் பந்த் போராட்டத்தை இங்கு முழுமையாக வெற்றி பெறச் செய்யுமாறு அனைத்து தொழிற்சங்கங் கள் கேட்டுக் கொண்டுள்ளன.