திருப்பூர், ஜன.19– திருப்பூரில் வேலை செய்யும் பல லட்சம் தொழி லாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பொருத்த மான இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று திருப்பூருக்கு வருகை தந்த நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தி னர் மனு அளித்தனர். இந்திய நாடாளுமன்றத்தின் தொழிலாளர் பிரிவு நிலைக்குழுவினர் செவ்வாயன்று திருப்பூருக்கு வருகை தந்தனர். இந்த குழுவிடம் சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் தலைவர் க.ராம கிருஷ்ணன், ஐஎன்டியுசி செயலாளர் ஏ.சிவசாமி, எச்எம்எஸ் செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் மனோகரன் ஆகியோர் கூட்டாக திருப்பூர் தொழிலாளர் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்க
இதில் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் மத்திய அரசு 44 தொழிலாளர், தொழிற்சாலைகள் குறித்த சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக திருத்தி உள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவில் தொழிற் சங்கங்கள் தெரிவித்த ஆலோசனைகளை, திருத்தங் களை கவனத்தில் கொள்ளாமல் தொழிலாளர்க ளுக்கு விரோதமான முறையில் இவை நிறைவேற்றப் பட்டுள்ளன. இந்த நான்கு சட்டத் தொகுப்புகளை அரசு ரத்து செய்ய நிலைக்குழு வலியுறுத்த வேண் டும்.
மாற்று இடத்தில் மருத்துவமனை
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பணிபுரியும் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை சந்தா செலுத்துகின்றனர். ஆனால், இம்மாவட்டத்தில் இஎஸ்ஐ மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகின்றன. இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் திரு முருகன்பூண்டி பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்த மான இடம் வாங்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி னார். ஆனால் இன்றுவரை மருத்துவமனை கட்டு மானப் பணி தொடங்கப்படவில்லை. அந்த இடம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு காரணமாக கட்டு மானப் பணி நடைபெறவில்லை எனத் தெரிவிக்கின்ற னர்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு உரிய இடங்கள் திருப்பூரில் பல பகுதிகளில் உள்ளன. அதில் பொருத்தமான இடத்தில் 500 படுக்கைகள், நவீன வசதிகளுடன் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட வேண்டும். அதேபோல் பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதித் திட்டத்திலும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ள னர். அவர்களின் பிஎப் தொடர்பான பணிகளை எளி மைப்படுத்த வேண்டும், பிஎப் தொடர்பான கோரிக் கைகளுக்கு கோவை மண்டல அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இங்குள்ள பிஎப் அலுவலகத்தை மண்டல அலுவலகத்துக்கு இணை யாக மேம்படுத்த வேண்டும்.
சட்டங்களை அமலாக்குக!
திருப்பூர் தொழிலாளர் குடியிருப்பு பிரச்ச னைக்கு தீர்வு காண மத்திய அரசு வீடுகட்டும் திட்டத்தின் கீழ் பனியன் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். பனியன் தொழிலாளர்க ளுக்கு 8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ,21ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும், இங்கு தினம் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தொடர்ச்சியாக தொழிலாளர் கள் பணியில் ஈடுபடுத்துவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்பு சம்ப ளம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பீஸ்ரேட் முறையில் வேலை செய்யும் தொழி லாளர்களுக்கும் போனஸ், ஈட்டிய விடுப்பு சம்ப ளம், இஎஸ்ஐ, பிஎஃப் உள்ளிட்ட அனைத்து சட்ட உரிமைகளும் வழங்குவதை உறுதிப்படுத்த வேண் டும். பனியன் தொழிற்சாலைகளில் சட்டவிரோத மான காண்ட்ராக்டர்கள் மூலம் பணி அமர்த்துவதை தடை செய்ய வேண்டும். கண்ட்ராக்ட் தொழிலாளர்க ளுக்கும் சட்ட உரிமைகள் அமுலாக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் காண்ட்ராக்ட் முறையை அனுமதிக்கும் கம்பெனிகள் மீது சட்டப்படியான நடவடிகைகள் மேற்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்ககூடிய முறையில் புலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டம்-1979 விதிகளின் அடிப்படையில் பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து விதிகளும் கறாராக அமுல் படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.